திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி வரலாறு : Trichy History in Tamil

திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.  சங்க கால சோழ மன்னர்களான நெடுங்கிள்ளி,  கரிகாலன்,  கோப்பெருஞ ்சோழன் ஆகியோரின் தலைநகரமான 'கோழி'  எனப்பெற்ற உறையூரின் ஒரு பகுதியாக இருந்தது.  களப்பிரர்கள் வருகையால் சங்க கால சோழ மன்னர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.  அதன் பின்னர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (கிபி 600-630)  ஆட்சி காலத்தில் திருச்சி பல்லவ அரசின் தெற்கு எல்லையாக இருந்தது.  மகேந்திர வர்மன் திருச்சி மலையை குடைந்து உண்டாக்கிய குகைக் கோயிலை மலையின் மேலே காணலாம், கிபி 650  முதல் 960  வரை பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு  முத்திரையர்கள் திருச்சி,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி புரிந்தனர்.  இவர்கள்  ' செந்தலை' என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.  சாத்தன்,  மாறன்,  குவாவன மாறன்,  குவாவஞ் சாத்தன், சுவரன் மாறன், சாத்தம்பூதி, சாத்தம் பழியிலிஆகியோர் முத்திரையை தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். முத்தரையர் தலைவர்களில் இளைய பரம்பரையினர் மலையடிப்பட்டியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.  விஜயாலயன் என்ற தஞ்சை சோழ மன்னனின் எழுச்சியால் முத்திரையர் ஆட்சி முடிவுக்கு வந்தது. திருச்சி  தந்தை சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.  சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் பாண்டிய மன்னர் ஆட்சியில் திருச்சி வந்தது.  கிபி 13ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர சோமேசுவரன் கண்ணனூரை தலைநகராகக் கொண்டுஆட்சி புரிந்தார்.  கண்ணனூர் இன்றைய திருச்சி நகரின் அருகிலுள்ள சமயபுரம் பகுதி எனப்படுகிறது.  பாண்டியன் விஸ்கியையடுத்து  மதுரை சுல்தானிய அரசின் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதி வந்தது.

 குமார கம்பண்ரின்  மதுரை படையெடுப்பு  வெற்றியடைந்ததை ஒட்டி(கிபி 1371) திருச்சி மற்றும் இதர பகுதிகள் விஜயநகர அரசின் ஆட்சியின் கீழ் வந்தன.  விஸ்வநாதரால் மதுரை நாயக்கர் அரசு தோற்றுவிக்கப்பட்ட பொழுது திருச்சி பகுதி இவ்வரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் திருச்சி நகர் பெரிதும் வளர்ச்சி அடைந்தது.  விசுவநாதர் வழிவந்த முத்துவீரப்பர்   கிபி 1616ல் தம் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.  விஜயநகர மன்னர் இரண்டாம் வெங்கடன் இறந்தபின்,  பதவிக்கு நாயக்கர்  தலைமையிலான ஒரு பிரிவினருக்கும் ஜக்கராயர் தலைமையிலான மற்றொரு பிரிவினருக்கும்  திருச்சிக்கு அருகில் போர் ஏற்பட்டது.  இப்போர் 'தோப்பூர்' போர்  எனப்படும்.  இப்போர் கிபி 1616ல்  நடந்தது. யச்சம் நாயக்கருக்கு  தஞ்சை நாயக்கர் இரகுநாதரும்,  ஜக்கராயர்ருக்கு  மதுரை நாயக்கர் முத்துவீரப்பரும், செஞ்சி நாயக்கரும்  ஆதரவளித்தனர்.  இப்போரில்முத்துவீரப்பர் ஆதரவளித்த ஜக்கராயர்  வெற்றி பெறவில்லை.  திருமலை மன்னர்(1623-1659)  மதுரை நாயக்க அரசின் தலைநகரை திருச்சியில் இருந்து மீண்டும் மதுரைக்கு மாற்றினர்.

திருமலையில் பேரன் சொக்கநாதன் (1659-1682)  கிபி 1665-ல் தன் தலைநகரை மீண்டும் திருச்சிக்கு மாற்றினர்.  இவர் திருச்சியில் ஒரு மாளிகை கட்டி,  திருச்சி நகரை அழகுபடுத்தினர்.  சொக்கநாதரின் ஆட்சிக் காலம் முதல் மதுரை நாயக்க அரசு முடிவற்ற காலம் வரை(கிபி 1736)  திருச்சி மதுரை நாயக்க அரசின் தலைநகராக இருந்தது. நாயக்கர் ஆட்சிக்குப் பின் திருச்சி ஆற்காடு நவாபின் அதிகாரத்தின் கீழ் வந்தது.  மராட்டியரின் வெற்றியினால் கிபி1741  முதல்1743 வரை திருச்சி மராட்டியரின் ஆட்சியில் இருந்தது.  முராரிராவ் என்பவர் மராட்டிய ஆளுனராக திருச்சியில் நியமிக்கப்பட்டார். கிபி 1743-ல் ஹைதராபாத் நிஜாம்  அசப்ஷா மராட்டியர்களை வென்று திருச்சியை கைப்பற்றினர்.  இப்பகுதியின் ஆட்சியை கவனிக்க அப்துல்லா என்பவரை நியமித்தார்.  இவர் இறந்தபின் (1744)  ஆற்காடு நவாபான அன்வருதீன் ஆட்சியின் கீழ் திருச்சி வந்தது.  அன்வருதீன்  இறந்தபின் ஆற்காடு நவாப்பின் பதவிக்கு அன்வருதீன் மகன் முகமது அலி,  சந்தாசாகிப் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.  இப்போட்டி காலத்தில் கர்நாடகப் போர்கள் நடந்தன.  கர்நாடக போர்களின்போது திருச்சி பல தாக்குதலுக்கு உட்பட்டது.

 ஆற்காட்டு  நவாபின் ஆட்சிக்குப்பின் திருச்சி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது.  திருச்சி மாவட்டத்தில் தலைமையிடமாக இன்றைய திருச்சி நகர் விளங்கியது. திருச்சி நகர் 1886  ஆம் ஆண்டு நகராட்சி ஆயிற்று.