திருச்சி மாவட்டம் : அல்லது திருச்சிராப்பள்ளி : Trichy in Tamil
திருச்சிராப்பள்ளியின் மற்றொரு பெயர் திருச்சி. காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நகரமாகும். திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது மலைக்கோட்டை மற்றும் திருவரங்கம் கோயிலாகும். இங்கு பாரத மிகு மின் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனை முக்கிய தொழிற்சாலைகள் ஆகும்.
திருச்சி சுற்றுலா இடங்கள் Trichy Tourist Places in Tamil
திருச்சிராப்பள்ளி அல்லது திருச்சி கோயில்கள்
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டையின் வேறு பெயர்கள் திரிசிரமலை, திரிசிரபுரம், முத்தலைமலை, பிரம்மகிரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
சமதரையாக உள்ள திருச்சி பூமியில் துருத்திக்கொண்டு இந்த 83 மீட்டர் (273 அடி) உயர பாறை கம்பீரமாக நிற்கிறது. உலகின் அதிகபட்ச பழங்கால பாறைகளில் என்றான் இதன் காலம் 3800 மில்லியன் வருடங்கள் (ஒரு மில்லியன் வருடம் என்றால் 10 லட்சம் ஆண்டுகள். நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள் இதன் பழமையை). இந்த வகையில் பார்த்தால் கிரீன்லாந்து மற்றும் இமயமலை பாறைகளை விட மிக மூத்த பாறை.மொத்தம் 344 படிக்கட்டுகள் கொண்ட இப்பாறையில் ஏறிச்சென்றால் இயேசு பிறப்பிற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம். ஒரு கல்வெட்டின் படி இக்கோட்டை கர்நாடகா கோவில் முக்கிய இடம் வகித்த ஆங்கில பேரரசு இம்மண்ணில் காலூன்ற பங்காற்றியிருக்கிறது. இந்த மலை பாறையின் மீது தான் புகழ்பெற்ற திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மேலும் இந்த உச்சியில் இருந்து திருச்சியின் அழகை ரசிக்கலாம். இங்கு பாறையிலிருந்து லிங்க வடிவில் எழுந்தருளி ஆசி வழங்கும் தாயுமானவர் கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்கு கீழே ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால குகைக் கோயில்கள் இரண்டு உள்ளன. இக்கோயில்களில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உள்ளன. இப்பாறையின் அடிவாரத்தில் ஒரு திருக்குளம் இருக்கிறது. இங்கு தெப்பத்திருவிழா நடக்கும். இக்குளத்திற்கு அழுதேன் ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் வாழ்ந்த இல்லம் உள்ளது. அதில் உள்ள காட்சிசாலையில் பல காலகட்டங்களைச் சேர்ந்த உன்னதமான சிற்பங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளன. எங்கள் தவிர இதர அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சி சாலை திறந்திருக்கும். தொலைபேசி:0431-2704621.
இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் தாயுமானவர், இறைவி மட்டுவார் குழலம்மை. மலை உச்சியில் உச்சி பிள்ளையாரும் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் பிரசித்தி பெற்று விளங்குகின்றனர். தரைத்தளத்தில் இருந்து சுவாமி சன்னதி வரை மேல்தளம் மூடப்பட்ட வழிகளை கொண்டது.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயில் ஒரு கலை கோயிலாகவும் விளங்குகிறது. கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சங்கிலிகள் தொங்குகின்றன. இது சிற்பக் கலையின் அதிசயம். அழகிய கண்ணைக் கவரும் ஓவியங்களும் உள்ளன. ஒரே தலையுடன் இரு பசுக்கள் வரையப்பட்டுள்ளன. இந்த கலையழகை காண மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.
காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தாய் வருவது தடைப்பட்ட போது, இறைவனே தாயாக மருந்து தன்னை வழிபட்டு வந்த இரத்தினவதி என்ற வணிக குலப் பெண்ணுக்கு பேறுகாலம் பார்த்து பின் தாய் வந்தபொழுது ரிஷப வாகனத்தில் காட்சி அளித்ததால், இறைவன் தாயும் மாணவராக வழங்கப் பெறுகிறார்.
திருச்சி நகரின் மையத்தில் மலை இருக்கிறது. மழையே ஒரு அழகுதான். வடபுறத்தில் இருந்து பார்த்தால், பிள்ளையார் போன்று தோன்றும் தென் பக்கம் இருந்து பார்த்தாள், நந்தி அமர்ந்து இருப்பது போல காட்சி தரும். கிழக்கிலிருந்து கண்டால், கப்பல் போல தெரியும். இருந்து பார்த்தால், யானை படுத்திருப்பது போல தெரியும்.
மலை உச்சியில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. சமணத்துறவிகள் பயன்படுத்திய கற்படுக்கைகளும் இருக்கின்றன.
மலை உச்சியிலிருந்து காவிரியாறு, ஸ்ரீரங்கம் கோவில், திருவானைக்காவல் கோயில் ஆகியவற்றை கண்டுகளிக்க முடியும்.
திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்க வந்தபோது ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் ஏற்பட்ட போட்டியில் கயிலையை தன் உடலால் ஆதிசேஷன் பிடிக்க வாயுவின் காற்றில் உலகம் அதிர, கயிலை மலையிலிருந்து சிதறி விழுந்த மூன்று துண்டுகளில் ஒன்று (மற்றவை திருக்காளத்தி, திரிகோணமலை) என்கிறது புராணம்.
இறைவனிடம் விடைபெற்று விபீஷணன் கொண்டுவந்த அரங்கனின் சிலையை பிராமணர் சிறுவனாக அங்கே வந்து சிலையை பெற்று திருவரங்கத்தில் வைத்துவிட்டு இங்கே வந்து அமர்ந்தவர் தான் உச்சியில் உள்ள பிள்ளையார் என்பது புராணம். மலை அடிவாரத்தில் மாணிக்கம் என்ற தொண்டரால் இடைவிடாமல் தொழப் பெற்றதால் மாணிக்க விநாயகராக காட்சியளிக்கிறார். தேவாரம் பாடிய மூவராலும் அருணகிரியார் ஆகியோராலும் பாடப்பெற்றது இத்தலம்.
ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம்
திருச்சியில் இருந்து 7 கிலோமீட்டர்தொலைவிலுள்ள ஸ்ரீரங்கம் இம்மாவட்டத்தில் அதி முக்கிய திருத்தலம். ஒரு பக்கம் காவிரி ஆறும் மறுபக்கம் கொள்ளிடமும் ஓட 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு நகரத்திற்குள், ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் 7 பிரமாண்ட மதில் சுவர்களுடன் 21 கோபுரங்களும் கொண்டுள்ளது. இக்கோபுரங்களில் இதன் ராஜகோபுரம் தான் இந்தியாவிலேயே பெரிய கோபுரம். கடந்த 1987 ஆம் ஆண்டு 72 மீட்டர் உயரத்துடன், பதிமூன்று அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் கட்டப்பட்டது. இதுபோக எஞ்சியுள்ள 12 கோபுரங்கள் அனைத்துமே 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. ஆரம்பத்தில் இந்த கோயிலில் இவ்வளவு பெரிதாக இல்லை. ஒரு சின்ன கோவில் தான் இங்கு இருந்தது. பின்னர், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் என்று அடுத்தடுத்து வந்த பல்வேறு மன்னர்கள் இக்கோயிலில் இவ்வளவு பெரிய கோயிலாக ஆக்கினார்கள். இப்படிப் அனைவராலும் விரிவாக்கம் செய்யப்பட்டு நாட்டின் பெரிய வளாகமாக திகழ்கிறது. சீரங்கம் மிகச்சிறந்த வைணவத் தலமாகும். இராமானுஜர் தன் கடைசி பத்து ஆண்டுகளை இங்குதான் கழித்தார். பள்ளிகொண்ட ரங்கநாதனின் கர்ப்பகிரகம் 240 அடி நீலமும் 180 அடி அகலமும் கொண்டது. இதன் மீது உள்ள பொன்வேய்ந்த விமானத்தை 2880 அடி நீளமும், 2475 அடி அகலமும் கொண்ட ஏழாவது பிரகாரத்திலிருந்து காணலாம்.
சமயபுரம்
திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலை பற்றி தெரியாத பக்தர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். இந்தியாவின் சக்தி பீடங்களில் ஒன்றாகவே மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. தொலைபேசி: 0431-2670460.
திருவானைக்காவல் (ஜம்பு)
திருச்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி திருவரங்கம் சாலையில் திருவானைக்காவல் என்ற இடத்தில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஜம்புகேஸ்வரனாக இறைவன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலுக்கு 5 சுற்றுச் சுவர்களும் 7 கோபுரங்களும் உள்ளன. இக்கோயிலில் லிங்க வடிவில் உள்ள மூலவர் நீரில் பாதி நனைந்தபடி காணப்படுகிறார். கருவறையில் உள்ள ஒரு நீரூற்று தான் இப்படி நனைந்து ஈசனை குளிரச் செய்கிறது.
இத்தல மூர்த்தியை சிலந்தியும், யானையும் பூஜித்ததால் பெருமை பெற்றுள்ளது. இறைவன் நாவல் மரத்தடியில் இருப்பதால் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. அம்மன் கோயில் பூஜை செய்யும் குருக்கள் பெண்வேடமிட்டு கொண்டு பூஜை செய்கிறார். இறைவனை அம்மன் பூஜித்த சிறப்பினை விளக்கவே எப்படி நடைபெறுகிறது. நேரம்: காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. தொலைபேசி 0431-2230257. ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கட்டப்பட்டது அப்போதே இந்த வளாகமும் கட்டப்பட்டது.
திருவெள்ளறை
திருச்சி நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருவெள்ளறை. இங்கு ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் கொண்டுள்ளார். ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பாடல்களில் கூறப்படும் 108 திவ்ய தேசங்களில் இதுவே மிகப் பழமையானதும், முதன்மையானதும் ஆகும். இக்கோயிலின் மங்களசாசதனத்தை பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் செய்துள்ளார்கள். இந்தக் கோயில் அதன் கட்டடக்கலை மற்றும் ஸ்வஸ்திக் வடிவில் அமைக்கப்பட்டுள்ள குளம் ஆகியவற்றால் மேலும் புகழ் பெற்றது.
வயலூர்
திருச்சியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் குருநகரில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை சூழலில் ஒரு சிறிய முருகன் கோவில் உள்ளது.
உறையூர்
திரு முக்கிஸ்வரம் என்ற உறையூர் திருச்சிக்கு அருகே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முற்காலச் சோழர்களின் தலைநகராக வரலாற்றுப் புகழ் பெற்றது. அந்த பழமையான நகரம் மணலால் அழிந்து போனதாக கருதப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை கோவில் தளத்துக்கு அடுத்ததாக கருதப்படும் தலம் இது. புகழ்ச்சோழ நாயனார், கோச் செங்கண் சோழன் ஆகியோர் இங்கு பிறந்தவர்கள். உறையூர் மற்றுமொரு பெயர் கோழிமண காரம். இப்ப பெயர்க் காரணம், கடவுள் அருள் பெற்ற கோழி ஒன்று யானையுடன் மோதி அதை வென்றதாக கர்ண பரம்பரை கதை கூறுகிறது. இங்குள்ள 78 மாடக்கோயிலை செங்கண் சோழன் கட்டினான். தொலைபேசி: 0431-2761869.
பிரம்மா இங்கு வந்து சிவனை பூஜித்த போது, சிவபெருமான் வேலைக்கு ஒரு நிறமாக மாறியதைக் கண்டு பஞ்சவர்ண நா நாதர் என பெயர் பெற்றதாக வரலாறு.
ஸ்ரீ கோகா்ணிநாகினிஸ்வரர் கோயில்
குடைவரைக் கோயிலான இதில் கோகா்ணிநாகினிஸ்வரர் பிரகதாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோயில்ம கேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது.
உத்தமர் கோயில்
பாடல் பெற்ற தலங்களில் 108ல் அதிக புகழ் பெற்றது உத்தமர் கோயில். இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை ரயிலடியில் இருந்து 8 கிலோமீட்டர் வடக்காகவும், ஸ்ரீரங்கம்ர யில் நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் வடக்கிலும் உள்ளது. இங்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய முக்கடவுள்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இந்த இடத்திற்கு கடம்ப வனம் மற்றும் திருமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
ஐயப்பன் கோவில்
இந்த ஐயப்பன் கோவில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ளது. எல்லா நாட்களிலும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள். சுத்தம் மற்றும் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் புகழ் பெற்றது. மக்கட்பேறு வேண்டுவோர், மற்றும் புதிதாக திருமணம் மாணவர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும். நேரம்: காலை 5 மணி முதல் இரவு 8.50 மணி வரை. தொலைபேசி: 0431-2461415.
குணசீலம்
திருச்சி முசிறி சாலையில், திருச்சியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது குணசீலம். குரு பகவான் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில், பக்திக்கும், திருவிழாவிற்கும் பெயர் பெற்றது போல மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சீர் பெறுவார்கள் என்று நம்பப்படும் கோவில்.
ஆத்மநாதன் சாமி கோயில்
இந்தக் கோயில் கிபி பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலிலுள்ள ஆளுயர சிலை மிக அழகுடன்காட்சியளிக்கிறது. இக்கோயிலின் கருங்கல் பளிங்கு மேற்கூரை மிக பிரபலமானது.
சாய்பாபா தியான மையம்
இந்த தியான மண்டபம் புதுப்பி வைரம் வழிச்சாலையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மண்டபத்திற்கு மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் வருகின்றனர். இம்மண்டபத்தில் புனித சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் மடம்
ஸ்ரீரங்கத்தில் உள்ள இந்த மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் கொண்டுள்ளார். மேலும் ஞானியின் வாழ்க்கை வரலாறு இங்கு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண மடம்
இந்த மடம் மதிப்பிற்குரிய இராமசாமி அடிகளார் அவர்கள் கடந்த 1949 இல் வைக்கப்பட்டது. பின்னர்1950இல் அனாதை குழந்தைகளுக்கான துவக்கப்பள்ளி ஏற்பட்டு அது பின்பு உயர்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது. இங்குள்ள குருகுலக் கல்வி முறைக்கு பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வருடத்தின் எந்த நாட்களிலும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இத்தகைய குழந்தைகள் இங்கு அனுமதிக்கப்படுவர். கிட்டத்தட்ட 300 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். ஏழை மற்றும் நிராதரவான குழந்தைகளுக்கு இலவச உணவும், தங்குமிடமும் வழங்கப்பட்டு சிறந்த கல்வியும் இங்கு தரப்படுகிறது. மேலும் மாலைகள் செய்வதற்கான தொழில்நுட்பம் கூட பயிற்சி அளிக்கப்படுகிறது. பகவான் இராமகிருஷ்ணர் மற்றும் அவர் சீடர் விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அருளுரைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றது.
திருச்சியில் பௌத்தம்
ஆச்சாரியா புத்ததத்த மகாதேரர் சோழ நாட்டில் பிறந்து வருகபுரம் என்று அழைக்கப்பட்ட உறையூரில் வாழ்ந்தவர். இவர் காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு. இவர் மதுரத்தாய்விலாசினி மற்றும் அபிதவத்தகரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்களில் திருச்சி அவர் வாழ்ந்த வாழ்க்கை மட்டும் சோழ நாட்டின் சிறப்பு, பூதமங்கலம், பூம்புகார் இன்னும் பிற பகுதிகளில் சிறப்பு போன்றவை அடுக்கடுக்காக கூறப்பட்டுள்ளன. மங்களம் கிராமத்தில் உள்ள அரவான் கோயிலில் ஆறடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முசிறியில் இருந்து 15 கிலோமீட்டர் வடகிழக்கிலும், துறையூரில் இருந்து 15 கிலோமீட்டர் தென்மேற்கிலும் இவ்வூர் உள்ளது. இந்தச் சிலையிலன் பீடப்பகுதியில் மூன்று சிங்க உருவங்கள் உள்ளன.
கரிகாலன் கல்லணை
இதுதான் புகழ் பெற்ற மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்ட மகா அணை. இந்த அணையை அவன் கிமு 2-ம் நூற்றாண்டில், காவிரிக்கு குறுக்காக கட்டினான். இந்தியா பொறியியல் அற்புதங்களிலேயே இந்தக் கல்லணை மிக முக்கியமானது. கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் நீளம் 329 மீட்டர் என்றால் அகலம் 20 மீட்டர் இப்போதும் இந்த அணைக்கட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் மேற்புறம் உள்ள சாலை பாலம் ஒன்று மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது உல்லாசப் பயணம் செய்ய அற்புதமான இடம்.
எரக்குடி சிறுநாவலூர்
இந்த ஊரில் ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்ட தானிய களஞ்சியம் ஒன்று உள்ளது. அவசரகாலத் தேவைக்கான சேமிப்பு களமாக இந்த களஞ்சியத்தை நவாப் கட்டியிருந்தார். இதில் அழகான இலைகள் ஏராளமாக உள்ளன.
அரசு அருங்காட்சி சாலை
பாரதிதாசன் சாலையில் இந்த அருங்காட்சி சாலை உள்ளது. வெள்ளிக்கிழமை தவிர விரத நாட்கள் அனைத்திலும் இந்த அருங்காட்சி சாலை திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஹசரத் நாதர் வாலி தர்கா
இந்த தர்கா ஆயிரம் ஆண்டு பழமையானது. கட்டடக்கலையின் ஒரு அற்புதம் இந்த தர்கா. பளபளக்கும் சலவை கல்லால் செய்யப்பட்ட இதன் கூடு இந்த தர்காவிற்கு மகத்தான தோற்றப்பொலிவை தருகிறது. திருச்சி நகரின் இதயப் பகுதியில் இந்த தர்கா உள்ளது.
லாடா்ஸ் சர்ச்
திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்திற்கு அருகே அமைந்துள்ளது. சர்ச் ஆஃப் லேடி லாடா்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சர்ச் தெற்கு பிரான்சில் உள்ள உலகப் புகழ்பெற்ற பசிலிக்கா ஆஃப் லாடா்ஸ் சர்ச்சின் அச்சு வார்ப்பாய் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கொம்பு (மேலணைக்கட்டு)
திருச்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த முக்கொம்பு அணைக்கட்டு. காவேரி ஓடுவதால் தீவாக்கப்பட்ட ஸ்ரீரங்கத்தின் தலைப்பகுதியில் உள்ள இந்த மேல் அணைக்கட்டின் நீளம் 685 மீட்டர். கடந்த 19 ஆம் நூற்றாண்டில் கொள்ளிடத்திற்கு குறுக்கே இந்த அணைக்கட்டு ஸ்ரீரங்கம் தீவு அமைப்பின் காரணமாக ஒரே வரிசையாக கட்டப்படாமல், மூன்று பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. இதுவும் கூட உள்ளே செல்வதற்கு சிறந்த இடம். இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.
பச்சை மலை
திருச்சியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் வழியில் பச்சை பசேல் என்று பசுமை படர்ந்து இருக்கும் மலை. இயற்கையை கண்டுகளிக்க உகந்த உல்லாச பயண இடம் பச்சை மலை. இங்கு தொல் புலிகளும் வாழ்கிறார்கள்.
கோளரங்கம்
திருச்சியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அண்ணா அறிவியல் மைய கோளரங்கம். புதுக்கோட்டை சாலையில், விமான நிலையம் அருகே அமைந்துள்ளது. தினமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நிரல் காட்டப்படுகின்றன. நேரம்: தமிழில் காலை 10.30 மணி, மதியம்1 மணி, மாலை 3.30 மணி. ஆங்கிலம் காலை 11.45 மணி. மதியம் 2.15 மணி. மாலை 4.45 மணி தொலைபேசி: 0431-2331921.
ஊமையன் கோட்டை
விடுதலை புரட்சியாளர்களை ஆங்கில அரசு இந்தக் கோட்டையில்தான் சிறை வைத்தது. இராமநாதபுரம் மன்னர் சேதுபதியால் 1687 இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இங்குள்ள சிவன் கோயில் இசை பற்றி கல்வெட்டுகள் உள்ளன. விஷ்ணு கோயிலில் இரண்டு மூலவர்கள் குடிகொண்டுள்ளார்கள். இவற்றில் ஒன்றில் உள்ள மூலவர், இந்தியாவிலேயே இவ்வகை உழவர்களின் மிகப்பெரிய வடிவினர். இச்சிலைக்குப் பின்னே, மகாவிஷ்ணுவும், அவர் அடியாரான ஆதிசேஷன் என்ற அரவமும், விஷத்தையும் நெருப்பையும் உமிழ்ந்து ராக்ஷஸர்களை ஓட ஓட விரட்டும் அற்புத செதுக்கு வேலைகள் உள்ளன.
புளியஞ்சோலை
திருச்சியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில், நீரோடைகள், சிற்றருகளும் ஓட குளிர்ச்சியும் பசுமையும் நிறைந்த பருப்பு. ஒரு நாள் சென்று திரும்பும் சுற்றுலா சோலை இது.
வ.வே.சு ஐயர்
தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவி பாரதி மற்றும் சுவாமி அரவிந்தர் ஆகியோரோடு தோளோடு தோள் நின்று அவர் வ.வே.சு ஐயர். நாட்டு மக்களிடம் சுதந்திரக் கனல் மூட்ட நானும் பாடுபட்டவர். சிறந்த எழுத்தாளரும் கூட ஒரு குருகுலத்தை நிறுவி அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து தொழில்பயிற்சி கல்வியும் தந்தார். இவருக்கான நினைவகம் கடந்த 5.5.1999 அன்று திறந்துவைக்கப்பட்டது. இதில் வ.வே.சு ஐயரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு நூலகமும் உள்ளது. தமிழின் முதல் சிறுகதை ஆசிரியர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. இந்த நினைவகம் 37, சாரகனேரி அக்ரகாரம், திருச்சியில் அமைந்துள்ளது.
நாதிர்ஷா தர்கா
இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித இடம். பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தர்க்க கட்டப்பட்டது. உர்ஸ என்ற இஸ்லாமிய திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அச்சமயம் பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள்.
திருவிழாக்கள்
மலைக் கோவிலின் மீது வீற்றிருக்கும் இறைவியின் பெயர் மட்டுவார் குழலம்மை. இறை லிங்க வடிவில் இருக்கிறார். மழையை அடுத்து ( கடைவீதியில்) தெப்பம் இருக்கிறது. பங்குனியில் பத்து நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும்.
சித்திரையில் பத்து நாள் தேர்த்திருவிழா நடைபெறும். மலையைச் சுற்றியுள்ள வீதிகளில் தேர் ஊர்வலம் வரும்.
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் ஆடி மாதம் ஆடிப்பூர விழா 10 நாள் நடைபெறும். நவராத்திரி விழாவும் பத்துநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
உச்சிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது ஊரே கோயிலில் திரண்டு இருக்கும்.
இன்றைக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரை வேண்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.